திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான ஸ்கில்ஸ் மருத்துவமனை வளாகத்தில் உள்ள மரங்களில் சிலுவை அடையாளம் இட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆந்திர மாநில பாஜக செய்தித் தொடர்பாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.
திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான ஸ்கில்ஸ் மருத்துவமனை வளாகத்தில் உள்ள மரங்களில் மர்ம நபர்கள் வெள்ளைநிற பெயிண்டால் சிலுவை சின்னம் வரைந்ததாக வந்த புகாரை அடுத்து சிலுவை சின்னங்கள் மரங்களில் இருந்து உடனடியாக நீக்கப்பட்டனர். திருப்பதியில் பக்தர்கள் மனங்களை புண்படுத்தும் விதமாக இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்களை கண்டுபிடித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அம்மாநில பாஜக கட்சி வலியுறுத்தியுள்ளது.