Categories
உலக செய்திகள்

இந்தியாவுக்கு கால கெடுவை நீட்டிக்க முடியாது – அமெரிக்கா திட்டவட்டம்!!

ஈரானிடமிருந்து எண்ணெய் இறக்குமதி செய்து வரும்  இந்தியாவுக்கு  காலக்கெடுவை   மேலும் நீட்டிக்கமுடியாது  என அமெரிக்கா அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டு ஈரானுக்கு அமெரிக்கா பொருளாதார தடை விதித்தது. இதனால் தனது நட்பு நாடுகள் எதுவும் ஈரானிடமிருந்து எண்ணெய் இறக்குமதி செய்யக்கூடாது என்று அறிவித்தது. ஆனால் ஈரான் நாட்டிடமிருந்து  இந்தியா, சீனா, ஜப்பான், துருக்கி   உள்ளிட்ட 8 நாடுகள் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து வருகின்றன. இந்நிலையில் இதற்க்கு  அமெரிக்கா கடும் எதிர்ப்புத் தெரிவித்து வந்தது. இதையடுத்து ஈரானிடமிருந்து எண்ணெய் இறக்குமதியை நிறுத்த இந்தியா கால அவகாசம் கேட்டதால் வரும் மே மாதம் 2ம்  தேதி வரை காலக்கெடுவை அமெரிக்கா விதித்திருந்தது.

Related image

இந்நிலையில் இது குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ விடுத்துள்ள அறிக்கையில், ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கிக் கொண்டிருக்கும் இந்தியா, சீனா, ஜப்பான், துருக்கி   உள்ளிட்ட 8 நாடுகள் எண்ணெய் வாங்குவதை நிறுத்திக் கொள்ளவேண்டும் என்று தெரிவித்துள்ளார். மேலும் கச்சா எண்ணெய் வாங்குவது தொடர்பாக அமெரிக்கா விதித்த கால அவகாசத்தை  கூடுதலாக நீட்டிக்க முடியாது என்றும் அவர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

Categories

Tech |