Categories
தேசிய செய்திகள்

கொடுமை… “இந்து பெண்ணை காதலித்து கல்யாணம்” ஜெயிலில் அடைக்கப்பட்ட இஸ்லாமிய இளைஞர்..!!

உத்திரப்பிரதேசத்தில் பஜ்ரங் தல அமைப்பினரின் லவ் ஜிகாத் புகாரின் பெயரில் இந்து பெண்ணை காதல் திருமணம் செய்த முஸ்லிம் இளைஞரை சிறையில் அடைத்துள்ளனர்.

உத்திரப்பிரதேச மாநிலத்தில் முரதாபாத் பகுதியைச் சேர்ந்த பிங்கி என்பவரும், ரஷீத் என்ற இளைஞரும் சில மாதங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் டிசம்பர் 6ஆம் தேதி அவர்கள் இருவரும் தங்கள் திருமணத்தை பதிவு செய்ய வந்துள்ளனர். அப்போது பஜ்ரங் தள அமைப்பினர் அப்பெண்ணை அழைத்து சென்று காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

அவர்களது திருமணம் லவ் ஜிஹாத் என்று புகார் கூறியுள்ளனர். இந்த வழக்கு பதிந்த போலீசார் பிங்கியை, பெண்கள் பாதுகாப்பு இல்லத்திற்கு அனுப்பி வைத்தனர். அவரது கணவர் மற்றும் மைத்துனரை, மதம் மாற கட்டாயப்படுத்தியதாக கூறி தற்போது வந்த புதிய சட்டத்தின்படி சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் இவ்வழக்கு முரதாபாத் ஜுடிசியல் மாஜிஸ்திரேட் விசாரணைக்கு வந்தது. மேலும் பிங்கி நீதிபதியிடம் தன் விருப்பப்படி திருமணம் செய்ததாகவும், தான் மேஜர் என்றும் கூறியுள்ளார். இதை கேட்ட நீதிபதி அவரை கணவருடன் வீட்டிற்கு செல்ல அனுமதித்தனர். பின்னர் இந்த செயலில் ஈடுபட்ட போலீசாரை கண்டித்தனர்.

Categories

Tech |