மகாராஷ்டிரா மாநிலத்தில் வங்கி அதிகாரியை 12 துண்டுகளாக நறுக்கி பெட்டியில் அடக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பை மாநகரின் வொர்லி பகுதியை சேர்ந்த 31 வயதான சுனில் குமார் என்பவரின் சடலமே பெட்டிக்குள் வைத்து அடக்கிய நிலையில் ராய்காட் மாவட்டத்தில் நெருள் நான் ரயில் நிலையம் அருகே கண்டெடுக்கப்பட்டது. சுனில் குமார் நண்பரான சார்லஸ் மற்றும் அவரது மனைவி சலோமி ஆகியோர் போலீசார் கைது செய்தனர். விசாரணையில் கடந்த 12ஆம் தேதி சுற்றுலா செல்ல போவதாக சுனில்குமார் அழைத்துக் கொண்டு சென்றுள்ளனர்.
அடுத்தநாள் திரும்பி வருவதாக சுனில்குமார் தாயாரிடம் கூறியுள்ளனர். இரண்டு நாட்களாகியும் சுனில் குமார் வீட்டிற்கு திரும்பாத நிலையில் தாயார் காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளனர். முதற்கட்ட விசாரணையில் வாங்கிச் ஊழியர் சுனில்குமார் சுற்றுலா சென்ற தகவல் தெரியவில்லை. விசாரணையில் ரயில் நிலையம் அருகே துண்டுகளாக வெட்டி நொறுக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மேலும் பெட்டியில் ஒட்டப்பட்டிருந்த ஸ்டிக்கர் மூலமாகவே குற்றவாளிகளை போலீசார் கைது செய்தனர்.
பெட்டியின் கடை உரிமையாளர் குற்றவாளிகளை அடையாளம் காட்டினர். சுனில்குமாரும், சார்லசும் ஒரே நிறுவனத்தில் பணியாற்றியதாக கூறப்படுகிறது. கடந்த 12ஆம் தேதி சார்லஸின் குடியிருப்புக்கு சென்ற சுனில் குமார் இருவரையும் இழிவாக பேசியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சார்லஸ் மற்றும் அவரது மனைவி அவரை கத்தியால் வெட்டி உள்ளனர். பின்னர் இருவரும் சேர்ந்து 12 துண்டுகளாக வெட்டி பெட்டிக்குள் அடைத்து ரயில்நிலையத்தில் கொண்டு சென்று விட்டு தப்பியுள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்தது.