மூன்று சிறுமிகள் கைகள் கட்டப்பட்டு வாயில் நுரை தள்ளிய நிலையில் இருந்ததில் 2 பேர் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் உன்னாவ் மாவட்டத்தில் 13 மற்றும் 17 வயதுடைய இரண்டு சிறுமிகள் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர். மேலும் 17 வயது சிறுமி ஒருவர் கவலைக்கிடமான நிலையில் இருந்துள்ளார். இந்த 3 சிறுமிகளும் தலித் சமூகத்தை சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் கூறுகையில், “இவர்கள் பண்ணையில் இருந்த கால்நடைகளுக்கு உணவளிக்கிறதுஇந்த மூன்று சிறுமிகளும் சென்றுள்ளனர். ஆனால் வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை.
அப்போது அவர்களுடைய கைகள் கட்டப்பட்டு வாயில் நுரை தள்ளிய நிலையில் அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமிகளுக்கு விஷம் கொடுத்து இருக்கலாம் என்று தெரிவித்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் நடந்ததில் சிறுமிகளின் உடலில் எந்த காயமும் இல்லை. மேலும் இது குறித்து விசாரிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளன. பிரேத பரிசோதனைக்கு பிறகே என்ன பிரச்சினை என்பது தெரியவரும் என்று கூறியுள்ளனர்.