சித்தூர் மாவட்டத்தில் உள்ள பாலமநேரி பகுதியில் ஒரு தனியார் பள்ளி அமைந்துள்ளது. இப்பள்ளியில் ஹரீஷ் என்ற மாணவர் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த மாணவனின் எழுத்து சரியாக இல்லாத காரணத்தினால் பள்ளியில் பணி புரியும் ஆங்கில ஆசிரியர் ஒருவர் அவரை தாக்கியுள்ளார். இதில் மாணவனுக்கு பலத்த காயம் ஏற்பட்டதால் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக பள்ளி நிர்வாகம் நடத்திய விசாரணையில் ஆசிரியர் மாணவனை தாக்கியது உண்மை என தெரிய வந்ததால் சம்பந்தப்பட்ட ஆசிரியரை பணி நீக்கம் செய்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன் பிறகு பாதிக்கப்பட்ட மாணவனை பள்ளி நிர்வாகம் நேரில் சென்று பார்த்து ஆறுதல் கூறியதோடு, சிகிச்சைக்காகும் மொத்த செலவையும் தாங்களே ஏற்றுக் கொள்வதாகவும் உறுதியளித்துள்ளது. மேலும் இதுபோன்ற சம்பவங்கள் இனி நடக்காதவாறு சம்பந்தப்பட்ட பள்ளி பார்த்துக்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.