தூத்துக்குடி மக்களுக்கு என்றைக்கும் அமமுக துணை நிற்கும் என டிடிவி தினகரன் ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
தூத்துக்குடியில் கடந்த 2018ம் ஆண்டு ஸ்டெர்லைட் தொழிற்சாலையை மூடக்கோரி நடைபெற்ற போராட்டத்தில் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த தாக்குதலில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிகழ்வின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி உயிர்நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் ஸ்டெர்லைட்டை எதிர்ப்பதிலும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதி கிடைக்கவும் தூத்துக்குடி மக்களுக்கு என்றைக்கும் அமமுக துணை நிற்கும் என்ற உறுதியை அளித்து, உயிரிழந்தவர்களுக்கு 2ஆம் ஆண்டு நினைவு தினத்தில் கண்ணீர் அஞ்சலியைக் காணிக்கையாக்குகிறேன் என டிடிவி தினகரன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
‘தாமதிக்கப்பட்ட நீதி, மறுக்கப்பட்ட நீதி’ என்பதை உணர்ந்து தூத்துக்குடி சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி உடனே கிடைக்க மத்திய, மாநில அரசுகள் உரிய அழுத்தம் கொடுக்கவேண்டும்.4/5
— TTV Dhinakaran (@TTVDhinakaran) May 22, 2020
மேலும் மனதைவிட்டு அகலாத கொடூரமாக தூத்துக்குடியில் ஈவு இரக்கமின்றி 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டு இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தற்போது வரை நீதி கிடைக்கவில்லை என்பது வேதனை அளிக்கிறது. மக்களுக்காக தான் திட்டங்களே தவிர திட்டங்களுக்காக மக்கள் இல்லை என்ற புரட்சி தலைவி அம்மாவின் வார்த்தைகளை மறந்து நிகழ்த்தப்பட்ட ஒரு வெறியாட்டம் நடந்து இரண்டாண்டுகள் ஓடி விட்டன என குறிப்பிட்டுள்ளார்.