Categories
சினிமா தமிழ் சினிமா

இப்ப என்னத்துக்கு அழுறீங்க….. நீங்க பாக்காத பிரச்சனையா….? சமந்தாவின் கண்ணீரால் மனமுடைந்த ரசிகர்கள்…..!!!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகை யாக நடிகை சமந்தா தற்போது ஒரு பேட்டி கொடுத்துள்ளார். நடிகை சமந்தா நடிப்பில் விரைவில் திரைக்கு வரும் யசோதா படத்தின் பிரமோஷனுக்காக பேட்டி கொடுத்தார். இந்த பேட்டியின் போது திடீரென அவருடைய உடல் நலம் குறித்து கேட்க கண்கலங்கி அழுதார். அதாவது நடிகை சமந்தா ஒரு அரிய வகை சரும பிரச்சனை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். இதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சமந்தா தற்போது உடல் எடை மெலிந்து காணப்படுகிறார். அதன்பிறகு பேட்டியின் போது சமூக வலைதளங்களில் பேசியது போன்று என்னுடைய உயிருக்கு ஆபத்து இல்லை என சமந்தா கூறினார்.

இதைப் பார்த்த ரசிகர்கள் தற்போது மனமுடைந்து சமந்தாவுக்கு ஆறுதல் கூறி வருகிறார்கள். அவர்கள் கூறியதாவது, நீங்கள் ரொம்ப தைரியமான பெண். உங்களுக்கு இந்த நோய் எல்லாம் ஒரு பெரிய பிரச்சினையே கிடையாது. நீங்கள் உங்கள் வாழ்க்கையில் பார்க்காத பிரச்சனையா? கண்டிப்பாக நோயிலிருந்து விரைவில் குணமடைந்து மீண்டு வருவீர்கள். எங்களோட சமந்தா எப்பவும் அழவே கூடாது. எதுக்காக இப்ப இந்த அழுகை. நீங்க எப்பவும் தைரியமா இருக்கணும். உங்களுக்கு நாங்க இருப்போம் என்று கூறி வருகிறார்கள். மேலும் நடிகை சமந்தா படங்களில் நடிக்கும் போது கூட தனக்கு இப்படி ஒரு வியாதி இருப்பதாக யாரிடமும் கூறாமல் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Categories

Tech |