Categories
கிரிக்கெட் விளையாட்டு

CSK ஃபேன்ஸ்க்கு மீண்டும் ஷாக் கொடுத்த ஜடேஜா….. அப்ப இந்த அணியில் இவர் இல்லையா?…..!!!!

CSKவுடன் தொடர்ந்து விளையாடுவேன் என்ற ட்வீட்டை ஜடேஜா தற்போது நீக்கியுள்ளதால், இது ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் முக்கிய வீரராக பார்க்கப்படுபவர் ரவீந்திர ஜடேஜா. தோனிக்கு அந்த அணியில் எந்த அளவுக்கு முக்கியமோ அதே அளவிற்கு முக்கியத்துவம் ஜடேஜாவுக்கும் இருந்து வந்தது. கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் தோனி கேப்டன் பதவி வேண்டாம் என்று கூற அந்த கேப்டன் பதவி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பல ஆண்டுகள் விளையாடி வந்த ரவீந்திர ஜடேஜாவுக்கு வழங்கப்பட்டது. ஆனால் கடந்த ஐபிஎல்-யில் ரவீந்திர ஜடேஜா தலைமையிலான அணி படுதோல்வியை சந்தித்தது. தொடர்ந்து போட்டிகளில் தோல்வியை தழுவிய காரணத்தினால் மீண்டும் தோனி கேப்டனாக வந்தார்.

மேலும் சிஎஸ்கே அணியுடன் ஜடேஜாவுக்கு சில கருத்து வேறுபாடு இருந்த காரணத்தினால் இனி சிஎஸ்கே வில் தொடர்ந்து விளையாட மாட்டார் என்று பல தகவல்கள் வெளியாகி வந்த நிலையில் அதை உறுதிப்படுத்தும் வகையில் தற்போது ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.  கடந்த பிப்., மாதம் ஜடேஜாவின் 10 ஆண்டுகால பயணத்தை குறிப்பிட்டு சென்னை அணி வாழ்த்தியிருந்தது. அதற்கு ஜடேஜா, “இன்னும் 10 ஆண்டுகள் தொடர்ந்து CSKவுக்கு விளையாடுவேன்” என்று குறிப்பிட்டிருந்தார். ஆனால், தற்போது அந்த ட்வீட் நீக்கப்பட்டுள்ளது. இதனால் அவர் அடுத்த ஆண்டு வேறு அணி மாற வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.

Categories

Tech |