நீண்ட இடைவெளிக்கு பின்பு இந்திய டி 20 அணியில் அஸ்வின் இடம் பெற்றுள்ளார். இந்நிலையில் அவர் மீண்டும் சிஎஸ்கே அணிக்கு திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நேர்காணல் ஒன்றில் பேசிய அஸ்வின் தெரிவித்துள்ளதாவது: “சிஎஸ்கே ஒரு பள்ளிக்கூடம். அதில் நான் பத்தாம் வகுப்பு வரை படித்தேன். அது என் வீடு, என்று குறிப்பிட்ட அவர் நான் என் வீட்டுக்கு திரும்ப விரும்புவதாகவும், அதை ஏலம் தான் முடிவு எடுக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். இந்நிலையில் ஏலம் முடிந்த பிறகுதான் சிஎஸ்கே அணியில் அஸ்வின் இடம் பெறுவாரா? இல்லையா? என்பது தெரியவரும்.
Categories