Categories
கிரிக்கெட் விளையாட்டு

CSK பீல்டிங் சொதப்பல்….. தேறிய மும்பை…. 155/7 ரன்கள் குவிப்பு….!!!!

ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இன்று மும்பை இந்தியன்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் விளையாடி வருகின்றனர். இதில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதைத்தொடர்ந்து முதலில் களமிறங்கிய மும்பை அணி முதல் ஓவரில் சென்னை அணி அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தியுள்ளது.

முகேஷ் சவுத்ரி வீசிய 2-வது பந்தில் ரோகித் சர்மா ரன் எதுவும் எடுக்காமல் மிட்செல் சான்ட்னரிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆக்கினார். இதைத் தொடர்ந்து 5-வது பந்தில் இஷான் கிசான் தன்னுடைய துல்லியமான யார்க்கர் மூலம் ஸ்டெம்பை தெறிக்கவிட்டார்.  இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி முதல் ஓவரிலேயே 2/2 என்ற பரிதாப நிலையில் ஆடி வந்தது.

இதைத்தொடர்ந்து சென்னை அணி தொடர்ந்து பீல்டிங்கில் சொதப்பியதால் 20 ஓவர் முடிவில் மும்பை அணி 155 ரன்களுக்கு 7 விக்கெட் எடுத்து இருந்தது. இந்த அணியில் அதிகபட்சமாக திலக் வர்மா 57 ரன்கள் எடுத்திருந்தார். சிஎஸ்கே-வில் முகேஷ் சக்கரவர்த்தி 3 விக்கெட்டுகளையும், பிராவோ 2 விக்கெட்டுகளையும் எடுத்தனர். இன்றைய போட்டியில் சிஎஸ்கே வின் பீல்டிங் மோசமாக இருந்தது. ஜடேஜா இரண்டு கேட்சுகளும்,  ஷிபம் துபேகேட்ச்சையும்  விட்டனர். இதனால் ஒரு கட்டத்தில் 47/4 ரன்கள் என தடுமாறிக் கொண்டிருந்த மும்பை இந்தியன்ஸ் அணி இறுதியாக போராடக்கூடிய இலக்கை அடைந்தது.

Categories

Tech |