சிஎஸ்கே அணி தோல்வியைத் அதற்கு குறிப்பிட்ட ஒரு வீரரை மறைமுகமாக குற்றம்சாட்டி வருகின்றனர்
2020 ஐபிஎல் விளையாட்டுப் போட்டியில் மும்பை அணியுடன் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது. ஆரம்பத்தில் துடுப்பாட்டத்தில் துவக்க வீரர்கள் சரியாக இல்லை என்ற விமர்சனம் எழுந்தது. ஆனாலும் பலம் பொருந்திய மும்பை இந்தியன்ஸ் அணியை வெற்றி பெற்றதால் மற்றவர்களது விமர்சனம் பெரிதாக எடுத்துக் கொள்ளப்படவில்லை.
டெல்லி மற்றும் ராஜஸ்தான் அணியுடன் விளையாடும் போது தோல்வியுற்றது கடும் விமர்சனத்திற்கு ஆளாக வைத்தது. தற்போதைய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் துடுப்பாட்டத்தில் கவலை அளிக்கும் விதமாக இருப்பது துவக்க வீரர்களான வாட்சன் மற்றும் முரளி விஜயின் பங்களிப்பு என கூறப்படுகின்றது. வாட்சன் அதிரடியாக விளையாட முயற்சிக்கிறார். ஆனால் முரளி விஜய் திணறுகிறார் என்ற குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
அணித்தலைவர் தோனியும் பயிற்சியாளரும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. மூன்று போட்டிகளிலும் அவர் திணறியதால் மற்ற வீரர்களுக்கு அழுத்தம் ஏற்பட்டு அணி தோற்று விட்டதாக கூறப்படுகிறது. இரண்டு போட்டிகளில் மிகவும் மோசமாக தோல்வியுற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உடனடியாக பெரும் மாற்றத்தை தனது அணுகுமுறையில் செய்ய வேண்டியுள்ளது. தோல்வி பெற்ற பிறகு ஆரம்பம் சரியாக இல்லை என்று மறைமுகமாக முரளி விஜயை சுட்டிகாட்டியதாக கூறப்படுகின்றது