ஐபிஎல் தொடரில் ஒப்பந்தப்படி அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு ஜடேஜா சென்னை அணிக்கு விளையாடுவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. ஐபிஎல் தொடரின் மினி ஏலம் இந்த ஆண்டின் டிசம்பர் மாதம் நடைபெற உள்ளது. இதனால் சிஎஸ்கே உடன் பிரச்சனையில் இருக்கும் ஜடேஜா ட்ரேட் வீரராக அறிவிக்கப்படுவார் என்று கூறப்பட்டது. இதனை நம்பி டெல்லி உள்ளிட்ட சில ஐபிஎல் அணிகள் சிஎஸ்கே நிர்வாகத்தை அணுகியுள்ளது. ஆனால் சிஎஸ்கே அணி அப்படி ஒரு எண்ணமே கிடையாது என்று கூறி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
Categories