சிஎஸ்கே அணியின் தோல்வி குறித்து அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் தெரிவித்துள்ளார் .
கொரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு இந்த வருடம் ஐபிஎல் 2020 காண சீசன் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் பல அணிகள் விளையாடினாலும், தமிழகத்தை பொறுத்த வரையில், சென்னை அணியின் மீதான எதிர்பார்ப்பு என்பது ரசிகர்களிடையே அதிக அளவில் இருந்தது. ஆனால், 2020 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே 3 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வென்றுள்ளது. இது குறித்து பேசிய அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் 12 ஆண்டுகளாக சிஎஸ்கே அணிக்கு பலமாக விளங்கிய சுழற்பந்து வீச்சு தற்போது தடுமாறியதால் சரி செய்ய வேண்டிய அவசியம் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அணியின் மிக முக்கிய வீரர்களை இழந்து நிற்பதாகவும் அவர் சிறு மன வேதனையுடன் தெரிவித்துள்ளார். சமீபத்தில் அணியில் இருந்து வெளியேற்றப்பட்ட ரெய்னா மற்றும் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் ஆகியோரை மனதில் வைத்து பேசுகிறார் என சிஎஸ்கே வின் ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதேபோல் அடுத்த போட்டியில் முதல் போட்டியில் சிறப்பாக ஆடிய ராயுடுவை களத்தில் இருக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.