CSK அணிக்கு ரெய்னா மீண்டும் திரும்பி வருவாரா என்பது குறித்து அணியின் நிர்வாக அதிகாரி கருத்து தெரிவித்துள்ளார்.
கொரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு இந்த வருடம் ஐபிஎல் 2020 காண சீசன் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் பல அணிகள் விளையாடினாலும், தமிழகத்தை பொறுத்த வரையில், சென்னை அணியின் மீதான எதிர்பார்ப்பு என்பது ரசிகர்களிடையே அதிக அளவில் இருந்தது. ஆனால், 2020 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே 3 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வென்றுள்ளது.
இந்நிலையில் தோல்வி குறித்து பேசிய அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் அணியின் முக்கிய வீரர்களை சிஎஸ்கே இழந்து தவிப்பதாக தெரிவித்தார். அவர் சமீபத்தில் அணியை விட்டு விலகிய ரெய்னாவை மனதில் வைத்து பேசுகிறார் என சிஎஸ்கே ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வந்த நிலையில்,
இந்த ஆண்டு ரெய்னா திரும்பிவர இயலாது என அந்த அணியின் நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். அணியை விட்டு விலகும் முடிவை ரெய்னா தானாகவே எடுத்தார். அவரது முடிவை நாங்கள் மதிக்கிறோம் என கூறியுள்ளார். மேலும் அம்பத்தி ராயுடு காயத்தில் இருந்து மீண்டு விட்டார். அடுத்த போட்டியில் சென்னை அணி மீண்டும் வலுவாக களமிறங்கும் என்று தெரிவித்துள்ளார்.