சிஎஸ்கே அணியில் தோனிக்கு பிறகு ரவீந்தர ஜடேஜா கேப்டனாக நியமிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்துள்ளனர் .
15-வது ஐபிஎல் சீசன் தொடருக்கான மெகா ஏலம் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற உள்ளது. இதில் ஏற்கனவே உள்ள 8 அணிகள் அதிகபட்சமாக 4 வீரர்களை தங்கள் அணியில் தக்கவைக்க அனுமதி வழங்கப்பட்டது .அதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் கேப்டன் தோனி ரூபாய் 12 கோடிக்கும் , ஜடேஜா ரூபாய் 16 கோடிக்கும், மொயீன் அலி ரூபாய் 8 கோடிக்கும் ருதுராஜ் கெய்க்வாட் ரூபாய் 6 கோடிக்கும் அணியில் தக்க வைக்கப்பட்டுள்ளனர். இதில் குறிப்பாக தோனி சம்பள ஊதியம் கடந்த சீசனை விட ரூபாய் 3 கோடி குறைந்துள்ளது. அதேசமயம் ஜடேஜாவுக்கு சம்பள உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ராபின் உத்தப்பா கூறும்போது,” நிச்சயம் தோனி தான் ஜடேஜாவுக்கு அணியில் முன்னுரிமை வழங்கி இருப்பார். அதோடு அணியில் ஜடேஜாவின் மதிப்பு தோனிக்கு நன்கு தெரியும் .அதேசமயம் தோனி ஓய்வு பெறும் பட்சத்தில் ஜடேஜா அணியின் கேப்டனாக நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளது “இவ்வாறு அவர் கூறியுள்ளார். இது குறித்து முன்னாள் வீரர் பார்த்தீவ் பட்டேல் கூறுகையில்,” சிஎஸ்கே அணியின் அடுத்த கேப்டன் என்ற அடிப்படையில்தான் ரவீந்திர ஜடேஜாவுக்கு இவ்வளவு தொகை வழங்கப்பட்டுள்ளது என நினைக்கிறேன் .அவர் ஒரு அற்புதமான வீரர் .டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் சிறப்பாக விளையாடி வருகிறார். இதனால் தோனி விளையாடப் போவதில்லை என்ற முடிவுக்கு வரும் சமயத்தில் கேப்டனாக ஜடேஜா பொறுப்பேற்பார் என கருதுகிறேன் “இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.