Categories
கிரிக்கெட் விளையாட்டு

சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் …. மைக் ஹஸ்சிக்கு மீண்டும்,கொரோனா பாசிட்டிவ் முடிவு …!!!

சிஎஸ்கே அணியின் பயிற்சியாளரான மைக் ஹஸ்சி, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் .

14வது ஐபிஎல் தொடர் கடந்த மாதம் 9ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது. ஆனால் தொடரில் வீரர்களுக்கு  தொற்று பாதிப்பு ஏற்பட்டதால், ஐபிஎல் போட்டி தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதில் சிஎஸ்கே அணியில் பேட்டிங் பயிற்சியாளரான மைக் ஹஸ்சி, கொரோனா தொற்றால்  பாதிக்கப்பட்டு ,சிகிச்சை எடுத்துக்கொண்டு வருகிறார். ஆஸ்திரேலியாவை சேர்ந்த இவர், தொற்றால் பாதிப்பால் சிகிச்சை எடுத்துக் கொண்டு இருப்பதால், அவரைத் தவிர மற்ற ஆஸ்திரேலிய வீரர்கள் மாலத்தீவுக்கு சென்றுள்ளனர்.

சென்னையில் சிகிச்சை எடுத்துக் கொண்டு வரும் மைக் ஹஸ்சிக்கு , சில நாட்களுக்கு முன் பரிசோதனை செய்யப்பட்டதில்,  தொற்று பாதிப்பு இல்லை ,என்று தெரிய வந்தது. இருந்தாலும் இவரை தனிமைப்படுத்துதல் நடைமுறைப்படி தனிமைப்படுத்தப்பட்டு , மீண்டும் பரிசோதனை செய்யப்பட்டதில், பாசிட்டிவ் முடிவு வந்துள்ளது. இதனால் தொற்றிலிருந்து  முழுமையாக குணம் அடையாததால், அவர் மேலும் சென்னையில் தங்கியிருந்து, சில நாட்கள் சிகிச்சை பெற வேண்டிய  நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

Categories

Tech |