Categories
கிரிக்கெட் விளையாட்டு

சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி…. மேலும் ஒரு வீரருக்கு கொரோனா தொற்று …!!


சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்களில் மேலும் ஒருவருக்கு கொரோனா  தொற்றி ஏற்பட்டுள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் இந்தியாவில் நடைபெற இருந்தது. ஆனால் கொரோனா பரவலின் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் வருகின்ற செப்டம்பர் 19ஆம் தேதி முதல் நம்பர் 10ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தப் போட்டிகள் துபை, ஷார்ஜா, அபுதாபியில் உள்ள மைதானங்களில் நடைபெறுகிறது. ஆகஸ்ட் 21ம் தேதி துபை வந்த சிஎஸ்கே அணி தங்கள் தனிமைப்படுத்துதல் காலத்தை திடீரென அதிகரித்துள்ளது. நேற்று முதல் பயிற்சிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் செப்டம்பர் 1 முதல் பயிற்சிகள் தொடங்கும் என சிஎஸ்கே அணி திட்டமிட்டு உள்ளதாக தெரிகிறது.

சிஎஸ்கே வீரர்களில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் துபையில் சிஎஸ்கே உறுப்பினர்கள் 12 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் சிஎஸ்கே வீரர்கள் மேலும் சில நாட்கள் தனிமைப்படுத்த படலாம். இதைத்தொடர்ந்து கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சிஎஸ்கே அணியை சேர்ந்தவர்கள் பற்றிய அதிகாரப்பூர்வமான தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |