அமைதி காத்த டூபிளெசிஸ்
அதன் பின் வாட்சன் – டுபிளெசிஸ் நிதான ஆட்டம் ஆடி ரன்களைச் சேர்த்தனர். டுபிளெசிஸ் 58 ரன்கள் எடுத்தார். வாட்சன் 36 ரன்கள் எடுத்தார். அடுத்து வந்த தோனி 5 பந்துகளில் வெறும் 3 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரது ஆட்டம் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றம் அளித்தது. அடுத்து வந்த அம்பதி ராயுடு அதிரடி ஆட்டம் ஆடி வந்த நிலையில், அவருடன் ஜோடி சேர்ந்த ஜடேஜாவும் அதிரடி ஆட்டம் ஆடினார்.
இருவரும் கடைசி நான்கு ஓவர்களில் சிக்ஸ் மழைகளைப் பொழிந்தனர். அம்பதி ராயுடு 25 பந்துகளில் 45 ரன்கள் சேர்த்தார். அவர் 4 சிக்ஸ் அடித்திருந்தார். ஜடேஜா 13 பந்துகளில் 33 ரன்கள் குவித்தார். அவரும் 4 சிக்ஸ் அடித்திருந்தார். சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் குவித்தது. இது டெல்லி அணிக்கு சவாலான இலக்காகவே கருதப்பட்டது.
தூணாக மாறிய தவான்:
டெல்லி அணியின் தொடக்க வீரர் ப்ரித்வி ஷா முதல் ஓவரின் இரண்டாவது பந்தில் டக் அவுட் ஆனார். அடுத்து வந்த ரஹானே 8 ரன்கள் எடுத்து தன் வேலையை முடித்துக் கொண்டு கிளம்பினார். இவர்களுடன் நின்றிருந்த தவான் பொறுப்பாக நிதானமாக ஆடினார். அவருடன் ஸ்ரேயாஸ் ஐயரும் நிதானமாக ஆடி 23 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
விக்கெட்கள் சரிந்தாலும் தவான் மட்டும் அதிரடியாக ரன் குவித்து வந்தார். ஸ்டோய்னிஸின் 14 பந்துகளில் 24 ரன்கள் எடுத்தார். கடைசி 4 ஓவர்களில் 41 ரன்கள் தேவை என்ற நிலையில் இருந்தது டெல்லி. அலெக்ஸ் கேரி, தவானுக்கு தோள் கொடுத்து ஆடினார்.
விறுவிறுப்புடன் வென்ற டெல்லி:
கடைசி 2 ஓவர்களில் 35 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், அலெக்ஸ் கேரி 19ஆவது ஓவரின் முதல் பந்தில் ஆட்டமிழந்தார். அந்த ஓவரில் டெல்லி 4 ரன்கள் மட்டுமே எடுத்தது. கடைசி ஓவரில் 17 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை இருந்தது. அப்போது அனுபவ வீரர் பிராவோ பந்து வீசுவார் என எதிர்பார்த்த ரசிகர்கள் ஏமாந்து போனார்கள்.
மாறாக, ஜடேஜாவிடம் பந்தை கொடுத்தார் தோனி. கடைசி ஓவரில் அக்சர் பட்டேல் 3 சிக்ஸ் அடித்தார். அக்சர் பட்டேல் சிக்ஸர்கள் அடிக்க டெல்லி கேபிடல்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. சிறப்பாக ஆடிய ஷிகர் தவான் சதம் கடந்தார். இதுவே அவரது முதல் டி20 சதம் என்பது குறிப்பிடத்தக்கது.
துள்ளி குதித்த சிறுவன்:
இந்தப்போட்டியில் டெல்லி கேப்பிடல் வெற்றி பெற்றுவிட்டது என்று அறிந்த சிறுவன் துள்ளி குதித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த சிறுவன் டெல்லி கேப்பிடல் வெற்றி பெற்றுவிட்டது என்று மகிழ்ச்சியை வெளிப்படுத்தினானா ?அல்லது சென்னை தோற்றுவிட்டது என்று மகிழ்ச்சியை வெளிப்படுத்தினானா ? என்று ரசிகர்கள் கிண்டல் அடித்து வருகின்றனர். ஏற்கனவே தொடர்ந்து வெற்றிகளை குவித்து வரும் டெல்லி கேப்பிடலுக்கு இந்த வெற்றி ஒன்றும் புதிதல்ல, சாதாரண ஒரு வெற்றிதான் எனவே சென்னை சூப்பர் கிங்ஸ் தோற்று விட்டது என்ற மகிழ்ச்சியில் தான் சிறுவன் அப்படி துள்ளி குதித்தான் என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
A victory to relish for the @DelhiCapitals.#Dream11IPL pic.twitter.com/wukj8mFBQs
— IndianPremierLeague (@IPL) October 17, 2020