Categories
கிரிக்கெட் விளையாட்டு

CSK VS KKR : ‘கடைசி வரை திக் திக் திக் ‘….! கொல்கத்தாவை வீழ்த்தி சென்னை ….!!!

கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சென்னை அணி பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறியது .

14-வது சீசன் ஐபிஎல் தொடரின் இன்று நடைபெற்ற  38-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின .இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி  பேட்டிங்  தேர்வு செய்தது .அதன்படி முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணியில் தொடக்க வீரர்களாக சுப்மன் கில்- வெங்கடேஷ் ஐயர் ஜோடி களமிறங்கினர்.இதில் சுப்மன் கில் 9 ரன்னில் வெளியேற,அவரைத் தொடர்ந்து வெங்கடேஷ் 18 ரன்னில் வெளியேறினார் .இதில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ராகுல் திரிபாதி அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 45 ரன்னில் வெளியேறினார் .இதன் பிறகு களமிறங்கிய ஆண்ட்ரே  ரசல் 22 ரன்னும் , தினேஷ் கார்த்திக் 26 ரன்னும்  எடுத்து ஆட்டமிழந்தனர் .

இதில் நித்திஷ் ராணா 37 ரன்னுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார் .இறுதியாக கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்தது. சிஎஸ்கே அணி தரப்பில் ஷர்துல் தாகூர் மற்றும் ஜேசன் ஹோல்டர் தலா 2 விக்கெட்டும் , ஜடேஜா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.இதன்பிறகு களமிறங்கிய சிஎஸ்கே அணி 172 ரன்கள் வெற்றி இலக்காக கொண்டு விளையாடியது. இதன் தொடக்க வீரர்களாக ருதுராஜ் கெய்க்வாட்- டு பிளிஸ்சிஸ் ஜோடி களமிறங்கினர் .இதில் அதிரடியாக விளையாடிய கெய்க்வாட்  40 ரன்னும், டு பிளிஸ்சிஸ் 43 ரன்னும் எடுத்து ஆட்டம் இழந்தனர் .

இதன்பிறகு களமிறங்கிய மொயின் அலி 32 ரன்னில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த அம்பத்தி ராயுடு 10 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்ததாக களமிறங்கிய சுரேஷ் ரெய்னா 11 ரன்னிலும் கேப்டன் தோனி 1  ரன்னிலும் ஆட்டமிழக்க சென்னை அணிக்கு சிக்கல் ஏற்பட்டது. இதனால் கடைசி 2 ஓவரில் வெற்றி பெற 26 ரன்கள் தேவைப்பட்டது .இதில்  19-வது ஓவரை கொல்கத்தா அணியில் பிரதித் கிருஷ்ணா வீசினார் . இதில் முதல் 2 பந்துகளில் இரண்டு ரன்கள் எடுக்க ,அடுத்து 3-வது மற்றும் 4-வது பந்தை ஆல் ரவுண்டர் ஜடேஜா சிக்சருக்கு அடித்தார். அதோடு அடுத்தடுத்த 2 பந்துகளையும் பவுண்டரிக்கு விரட்டினார். இதனால் கடைசி ஓவரில் வெற்றி பெற 4 ரன் தேவைப்பட்டது.அப்போது கடைசி ஓவரில் சுனில் நரைன் பந்து வீசினார் .இதில் முதல் பந்தில்  சாம் கர்ரன் ஆட்டமிழக்க ,3-வது பந்தில் ஷர்துல் தாகூர் 3 ரன் அடித்தார் .கடைசி பந்தில்  தீபக் சாகர் ஒரு ரன் அடிக்க சென்னை அணி திரில் வெற்றி பெற்றது.

Categories

Tech |