Categories
கிரிக்கெட் விளையாட்டு

CSK VS KKR : தடுமாறும் கொல்கத்தா அணி ….! 12.3 ஓவரில் 90/4 …!!

14-வது சீசன் ஐபிஎல் தொடர் இந்தியாவில் கடந்த ஏப்ரல் 9-ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது .ஆனால் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது. இதில் 29 லீக் போட்டிகள் முடிந்த நிலையில் ,மீதமுள்ள போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இதில் இன்று நடைபெறும் 38-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன .இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி  பேட்டிங்  தேர்வு செய்தது .அதன்படி முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணியில் தொடக்க வீரர்களாக சுப்மன் கில்- வெங்கடேஷ் ஐயர் ஜோடி களமிறங்கினர்.

இதில் சுப்மன் கில் 9 ரன்னில் வெளியேற, அவரைத் தொடர்ந்து வெங்கடேஷ் 18 ரன்னில் வெளியேறினார் .இதன்பிறகு ராகுல் திரிபாதி – கேப்டன் மோர்கன் ஜோடி சேர்ந்தனர் . இதில் மோர்கன் 8 ஆட்டமிழந்தார் .அடுத்ததாக களமிறங்கிய நித்திஷ் ராணா , ராகுலுடன் ஜோடி சேர்ந்துள்ளார் .இதில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த  ராகுல் திரிபாதி  45 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார் .கொல்கத்தா அணி 12.3 ஒவரில் 4 விக்கெட் இழப்புக்கு 90 ரன்கள் குவித்துள்ளது.

Categories

Tech |