பிக் பாஸ் பிரபலம் மீரா மிதுன் நடிகர் விஜய் குறித்து சம்பந்தமில்லாத பதிவு ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.
கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த இந்தியாவில் தொடர்ந்து ஊரடங்கு பல்வேறு கட்டமாக நீட்டிக்கப்பட்டு வந்ததால், ஐபிஎல் 2020 காண சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் வைத்து நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் பங்கேற்பதற்காக வீரர்கள் கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அதேசமயம் கொரோனாவுக்கான பரிசோதனைகளையும் வீரர்களும், அணி நிர்வாகிகளும் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் பரிசோதனையில் சிஎஸ்கே அணியில் பலருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து ஐபிஎல் போட்டியில் csk அணி பங்கேற்குமா? பங்கேற்காதா என்பது உள்ளிட்ட கேள்விகள் ரசிகர்கள் மத்தியில் தொடங்கிவிட்டன. இந்நிலையில் இந்த நிகழ்வுகளை மையமாக வைத்து மீண்டும் இளைய தளபதி நடிகர் விஜய் அவர்களை சீண்டி மீரா மிதுன் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில்,
விஜய் அவரது மகன் சஞ்சய் உடன் சிஎஸ்கே அணியின் ஜெர்சியை அணிந்திருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு, இவர் இந்த ஜெர்சியை அணிந்த அன்றிலிருந்து சிஎஸ்கே அணி நிறைய சிக்கல்களை எதிர்கொள்கிறது. தற்போது ரெய்னாவும் வெளியேறி விட்டார் என கூறியுள்ளார். மீராவின் இந்த பதிவிற்கு விஜய் ரசிகர்கள் கொதித்துப் போய், அவரும் அவரது மகனும் எப்போதோ சிஎஸ்கே ஜெர்சியை அணிந்து புகைப்படம் எடுத்திருக்கிறார்கள்.
அதற்குப்பின் சிஎஸ்கே பல வெற்றிகளை குவித்துள்ளது. தற்போது அந்த புகைப்படத்தை இன்றைய காலகட்டத்தில் ஒப்பிட்டு சம்பந்தமில்லாமல் பதிவிடுவது முறைகேடான பண்பாடு என ஆவேசத்துடன் பல கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். தன்னைத்தானே சூப்பர் மாடல் என சொல்லிக்கொண்டு இருக்கும் மீரா மிதுன் அவர்களின் இந்த கருத்து மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
https://twitter.com/meera_mitun/status/1300340920374550529