மீண்டு வெற்றி முகம் காணும் போது அடிக்கும் அடி சம்பட்டி அடி ஆக இருக்கும் என்று ஹர்பஜன் சிங் ட்வீட் செய்துள்ளார்.
நேற்று நடைபெற்ற ஐபிஎல் 21வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீழ்த்தியது. எளிய வெற்றி இலக்காக இருந்தாலும், சென்னை அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. சென்னை அணியின் தோல்வி ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. மேலும் இந்த ஐபிஎல் தொடர் முழுவதும் சொதப்பி வரும் கேதார் ஜாதவ் மீது ரசிகர்கள் கடும் கோபத்தில் இருக்கின்றன. கோபத்தின் வெளிப்பாடாக ட்விட்டரில் ஜாதவை விமர்சித்து, கேலிசெய்து, வீடியோக்களை பதிவு செய்து வருகின்றனர்.
முதல் போட்டியை வெற்றியுடன் தொடங்கிய சென்னை அணி அடுத்தடுத்து ஹாட்ரிக் தோல்விகளை சந்தித்து. ஐந்தாவது போட்டியில் மீண்டும் வெற்றி பெற்று நேற்று ஆறாவது போட்டியில் தொடர்ந்து இரண்டாவதுவெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சென்னை அணியின் தோல்வி ரசிகர்களை மிகுந்த கவலை அடைய வைத்துள்ளது. இந்நிலையில் சென்னை அணியின் தோல்வி குறித்து முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள கருத்தில், இ(எ)துவும் கடந்து போகும் என்னுடைய தோல்வியை ஒரு கூட்டமே கொண்டாடுகிறது ஆனால் என்னுடைய வெற்றியை ஒரு இனமே கொண்டாடும் என்பதை மறக்க வேண்டாம். மீண்டு வெற்றி முகம் காணும் போது அடிக்கும் அடி சம்பட்டி அடி ஆக இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் திரும்பி வருவதை ஐபிஎல் சரித்திரம் பேசும் என்று பதிவிட்டுள்ளார்.
இ(எ)துவும் கடந்து போகும் என்னுடைய தோல்வியை ஒரு கூட்டமே கொண்டாடுகிறது ஆனால் என்னுடைய வெற்றியை ஒரு இனமே கொண்டாடும் என்பதை மறக்க வேண்டாம். மீண்டு வெற்றி முகம் காணும் போது அடிக்கும் அடி சம்பட்டி அடி ஆக இருக்கும் @ChennaiIPL திரும்பி வருவதை @IPL சரித்திரம் பேசும் #KKRvCSK #csk
— Harbhajan Turbanator (@harbhajan_singh) October 7, 2020