Categories
கிரிக்கெட் விளையாட்டு

எல்லாமே முடிஞ்சு போச்சு…! சென்னைக்கு BYE BYE…! ஹர்பஜன் நன்றி சொல்லி ஷாக்…!!

IPL போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடனான ஒப்பந்தம் முடிவடைந்துவிட்டது என்று ஹர்பஜன் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரரான ஹர்பஜன் சிங் கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற IPL போட்டியின் ஏலத்தில் சிஎஸ்கே அணியில் ஒப்பந்தம் செய்யப்பட்டார். அந்த சீசனில் விளையாடிய ஹர்பஜன்சிங் அனைத்து கிரிக்கெட் ரசிகர்களின் மனதிலும் இடம் பிடித்து விட்டார். மேலும் அவர் தமிழ் மொழியின் மீது கொண்ட ஆர்வத்தின் காரணமாக ஒவ்வொரு போட்டியின் போதும் தமிழில் ட்வீட் செய்து ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி வந்தார். இதனால் ரசிகர்கள் ஹர்பஜன் சிங்கிற்கு “தமிழ்ப்புலவர்” என்ற புனைப் பெயரை வைத்தனர்.

இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் 2020ஆம் ஆண்டு  நடைபெற்ற IPL தொடரில் 13 வது சீசனில் சில தனிப்பட்ட காரணங்களுக்காக ஹர்பஜன்சிங் போட்டியிலிருந்து விலகினார்.மேலும் அந்த சீசனில் வரலாற்றிலேயே முதல்முறையாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ஐபிஎல் ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேற முடியாமல் லீக் போட்டிகளோடு தொடரிலிருந்து விலகியது. சிஎஸ்கே அணியுடனான தனது 2 ஆண்டு கால ஒப்பந்தம் முடிவடைந்துவிட்டது என்று தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில்,” சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடனான ஒப்பந்தம் முடிவுக்கு வந்தது. இந்த அணிக்காக விளையாடியது  எனக்கு மிகச் சிறந்த அனுபவமாக இருந்தது. சென்னை அணியுடனான  அழகான நினைவுகள், மற்றும் நண்பர்களை நான் இனிவரும் காலங்களில் நினைவில் கொள்வேன். கடந்த இரண்டு ஆண்டுகளாக எனக்கு ஆதரவளித்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், ஊழியர்களுக்கும் எனது ரசிகர்களுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |