கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு லேசான அறிகுறிகள் இருந்த நிலையில் சிடி-ஸ்கேன் எடுத்தாள் அதிக அளவில் பின்விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
உலக நாடு முழுவதும் கடந்த ஒரு வருட காலத்திற்கு மேலாக கொரோனா நோய் பரவல் அதிக அளவில் பரவி மக்களை பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றது. இதனைக் கட்டுப்படுத்த பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையிலும் இதனைக் கட்டுக்குள் கொண்டு வரமுடியவில்லை. இந்தியாவில் மட்டும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்தை எட்டியுள்ளது.
கொரோனா அதிகரிப்பால் ஏராளமான நோயாளிகள் வருவதால் மருத்துவமனையில் படுக்கைகள் பற்றாக்குறை மற்றும் ஆக்சிஜன் தட்டுப்பாடு அதிக அளவில் ஏற்பட்டுள்ளது. எனவே மருத்துவமனைகளில் படுக்கை வசதி பற்றாக்குறை காரணமாக கொரோனா வைரஸின் தாக்குதல் லேசான அறிகுறிகள் இருந்தால் வீட்டிலிருந்தபடியே தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை மேற்கொண்டு வர அறிவுறுத்தி வருகின்றனர்.
கொரோனா பாதிப்பு உள்ளவர்களுக்கு முதலில் நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டு மூச்சு திணறி உயிரிழக்கும் அபாயம் நேரிடுகிறது. இதனால் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நபருக்கு சிடி-ஸ்கேன் எடுக்கப்பட்டு நுரையீரல் மற்றும் உள் உறுப்புகள் பாதிக்கப்பட்டு உள்ளதா என்பதை கண்டறிந்து அதற்கு ஏற்ப சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதேசமயம் நோயாளிகளும் உள்ளுறுப்புகளில் பாதிப்பு உள்ளதா? என்பதை அறிந்து கொள்ள அதிக அளவில் சிடி-ஸ்கேன் நாடி செல்கின்றனர்.
சிடி-ஸ்கேன் என்பது உள்ளுறுப்புகளை தெளிவாக படம் பிடிக்கும் என்பதால் பொதுமக்கள் அதற்கு பயப்படாமல் எடுத்துக் கொள்கின்றன. ஆனால் சிடி-ஸ்கேன் மிகவும் ஆபத்தானது என்று எய்ம்ஸ் டைரக்டர் டாக்டர் ரன்தீப் குலேரியா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து டாக்டர் ரன்தீப் குலேரியா அவர்கள், “சிடி-ஸ்கேன் மற்றும் பயோமேக்கர் ஆகியவை மக்கள் தவறாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. உங்களுக்கு லேசான அறிகுறி இருக்கும் பட்சத்தில் சிடி-ஸ்கேன் செய்யும்போது அவை 300 மார்பக எக்ஸ்ரேவிற்கு சமமானது என்றும் இது அதிக அளவில் பின்விளைவுகளை ஏற்படுத்தும்” என தெரிவித்துள்ளார்.