கடலூர் மாவட்டத்தில் இரண்டாம் கட்ட உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு அண்ணாகிராமம், காட்டுமன்னார்கோயில், கீரப்பாளையம், குமராட்சி, நல்லூர், ஸ்ரீமுஷ்ணம், விருத்தாசலம் ஆகிய 7 ஊராட்சி ஒன்றியங்களுக்கு நடைபெற்று வருகிறது. இதில், 12 மாவட்ட கவுன்சிலர், 123 ஒன்றிய கவுன்சிலர், 342 பஞ்சாயத்துத் தலைவர், 2,397 வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்குத் தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தது.
இதில் ஒரு ஒன்றிய கவுன்சிலர், 13 ஊராட்சிமன்றத் தலைவர்கள், 379 வார்டு உறுப்பினர்கள் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மொத்தமுள்ள 3,038 பதவியிடங்களில் 393 பேர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதால் மீதமுள்ள 2,645 பதவியிடங்களுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இதில், மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு 60 பேரும், ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 619 பேரும், பஞ்சாயத்துத் தலைவர் பதவிக்கு 1,277 பேரும், வார்டு உறுப்பினர் பதவிக்கு 5,840 பேரும் போட்டியிடுகின்றனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், நடைபெறுகின்ற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவிற்கு எளிதான வெற்றி உள்ளதாகவும் இந்தியாவிலேயே தமிழ்நாடு அனைத்து துறைகளிலும் முதன்மை மாவட்டமாக இருக்கிறது என்றும் பெருமையுடன் கூறினார்.