காவல் நிலையத்தில் இருந்த விசாரணை கைதி தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டத்திலுள்ள புதுக்கூரைப்பேட்டை பகுதியில் 13 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த சிறுமி தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது, மாதா கோவில் திருவிழாவிற்கு ரேடியோ சர்வீஸ் வேலைக்காக வந்திருந்த அஜித் என்பவர் இந்த சிறுமியை கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கடத்திச் சென்றுவிட்டார். இதனையடுத்து விருத்தாசலம் காவல் நிலையத்தில் சிறுமியின் தாயார் அஜீத் மீது புகார் அளித்தார்.
அந்த புகாரின் பேரில் விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து அஜித்தை கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது இவரின் மீது ஏற்கனவே விருத்தாசலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ சட்டத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது என்பது போலீசாருக்கு தெரியவந்ததுள்ளது. இந்நிலையில் அஜித் காலையில் கழிவறைக்கு செல்வதாக கூறிவிட்டு காவல் நிலையத்தில் இருந்து தப்பி ஓடிவிட்டார். இதனால் விருதாச்சலம் துணை போலீஸ் சூப்பிரண்டு மோகன் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் தனித்தனியாக பிரிந்து தப்பி ஓடிய அஜித்தை வலைவீசி தேடி வருகின்றனர்.