சீரகத்தின் நன்மைகள் பற்றிய தொகுப்பு:
பண்டைய காலங்களில் அஞ்சரைப்பெட்டி என்ற சாதனம் சமயலறையில் இருக்கும். அதில் கடுகுக்கு அடுத்தது சீரகத்தை வைப்பார்கள்.
சீரகத்தை அவர்கள் இரண்டாவது இடத்தில் வைத்தாலும், அது உடலுக்கு உண்டாகும் இடர்பாடுகளை களைய வல்லது.
சீரகம் உடலை முழுமையாக சீர்செய்து விடும். பண்டைய மனிதன், உணவே மருந்து என சீரகத்தை பயன்படுத்தி பயன் அடைந்துள்ளார்கள்.
இன்னும் சமையலில் சீரகத்தை ஏற்காதவர்கள் இல்லை என்றே சொல்லலாம். அது உடலுக்கு குளிர்ச்சியை தூண்டும்.
சீரகத்தை உலர்த்திப் பொடித்து, அதில் ஒரு கிராம் அளவு எடுத்து தேன் அல்லது பாலில் காலை மாலை என இருவேளை சாப்பிட்டு வர பித்தம், வாய்வு, செரியாக் கழிச்சல், உதிரச்சிக்கல் போன்றவற்றை சீராக்குகிறது.
கேரளா நண்பர்களைப் போல் சீரகத் தண்ணீரை அவ்வப்போது சேர்த்தால் ரத்தக்கொதிப்பு என்ற நோயே நெருங்காது.