பிஸியான நடிகையாக வலம்வரும் பூஜா ஹெக்டே புதிய படங்களுக்கு கால்ஷீட் கொடுக்க மாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.
முன்னணி நடிகர் ஜீவா நடிப்பில் கடந்த 2012ஆம் ஆண்டு வெளியான முகமூடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே. இதை தொடர்ந்து இவர் தெலுங்கு மற்றும் இந்தி சினிமாவில் நடித்து தற்போது முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கிறார்.
தென்னிந்திய மொழி படங்களில் பிஸியான நடிகையாக வலம் வரும் பூஜா ஹெக்டே தற்போது ஆச்சார்யா, ராதே ஷியாம், மோஸ்ட் எலிஜிபில் பேச்சுலர், சர்க்கஸ், தளபதி 65 ஆகிய படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில் பிஸியான நடிகையாக வலம்வரும் பூஜா ஹெக்டேவிற்கும் மேலும் ஒரு பட வாய்ப்பு குவிந்துள்ளது. அதன்படி மகேஷ் பாபு மற்றும் திரிவிக்ரம் ஆகியோர் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தில் பூஜா எட்டே நடிக்க இருக்கிறார் என்று தகவல் வெளியாகியது.
ஆனால் நடிகை பூஜா ஹெக்டே இச்செய்தியை முற்றிலும் மறுத்துள்ளார்.ஏனென்றால் அவர் தற்போது தன் கைவசமுள்ள படங்களில் தான் ஆர்வம் செலுத்தி வருகிறாராம். ஆக இந்த படங்கள் அனைத்தும் முடிந்த பிறகே அடுத்த படத்தைப் பற்றி யோசிப்பேன் என்று கூறியுள்ளார். மேலும் அதுவரை புதிய படங்களுக்கு கால்ஷீட் கொடுக்க மாட்டேன் என்றும் தெரிவித்துள்ளார்.