பண்டைய காலம் தொட்டு பயன்பாட்டில் இருந்து வரும் பொருள் தயிர். தயிரில் இருக்கும் மருத்துவ பயன்கள் பற்றிய தொகுப்பு.
- பாஸ்பரஸ் கால்சியம் நிறைந்த தயிர் எலும்புகளுக்கு வலிமை சேர்க்கின்றது.
- புரோபயாடிக் என்ற நல்ல பாக்டீரியா தயிரில் இருப்பதால் குடலை பாதுகாக்கின்றது.
- புரோபயாடிக் பாக்டீரியா வயிற்றில் இருக்கும் நுண்கிருமிகளை அழித்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றது.
- தயிரில் இருக்கும் நல்ல கொழுப்பு ரத்தக்குழாயில் இருக்கும் கெட்ட கொழுப்பை அழித்து ரத்த அழுத்தம் ஏற்படுவதை தடுக்கிறது.
- தயிர் சாப்பிட்டு வருவதால் அல்சர் நோய் குணப்படுத்தபடுகிறது.
- தயிர் தோல் பிரச்சினைகளை குணப்படுத்தும்.
- தயிரை தலையில் தேய்த்து குளித்தால் பொடுகு தொல்லை நீங்கும்.
- தயிரை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வதால் மன அழுத்தம் குறையும், நன்றாக தூங்க முடியும்.
- உடல் சூட்டைத் தணிக்க தயிர் உதவிபுரிகிறது.
- தயிர் சாப்பிடுவதால் சிறுநீரக தொற்று நோய்களிலிருந்து விடுபட முடியும்.