சீதா பழத்தின் மருத்துவகுணம் குறித்த முழுமையான விபரங்களை இந்த செய்தி தொகுப்பில் காண்போம்.
உணவே மருந்து என்று வாழ்ந்து கொண்டிருந்த நாம் இன்றைய காலகட்டத்தில் மருந்தே உணவு என்ற சூழலுக்கு தள்ளப்பட்டு கொண்டிருக்கிறோம். புதுப்புது வகையான உணவு வகைகள் மேல்நாட்டு உணவு உள்ளிட்டவற்றை உண்டு ரத்தசோகை, ரத்த அழுத்தம், இதயம் சம்பந்தப்பட்ட நோய் உள்ளிட்ட பல நோய்களை உணவு மூலமாக வரப்பிரசாதம் போல் நாமே வாங்கிக் கொள்கிறோம். ஆகவே இனியாவது இயற்கையான காய்கறிகள் பழங்களை உண்டு வாழக் கூடிய வாழ்க்கையை உடல்நலத்துடன் வாழ வழிவகுப்போம்.
அந்த வகையில் இன்றையதினம் சீதாப்பழத்தின் மருத்துவ குணங்கள் பற்றி இந்த செய்தித் தொகுப்பில் காண்போம்: சீத்தாப்பழத்தில் வைட்டமின் சி சத்து அதிகமாக உள்ளது. சீதாப்பழம் ரத்தசோகை நோயை குணப்படுத்தக் கூடியது. குறிப்பாக பெண்களுக்கு சிறந்த மருத்துவ குணம் கொண்ட கனியாக சீதாப்பழம் திகழ்கிறது. ரத்த அழுத்தம் அதிகம் உள்ளவர்கள் சீதாப்பழத்தை சாப்பிட்டால் ரத்த அழுத்தம் சீராக குறையும். மேலும் சீதாப்பழத்தில் பொட்டாசியம் சத்து இருப்பதால் ரத்த கொதிப்பையும் அது கட்டுப்படுத்தும்.