கடலூர் மாவட்டத்தின் காட்டுமன்னார்கோவில் பேரூராட்சியில் ஆகஸ்ட் 4 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் அதனுடைய பாதிப்பு ஆங்காங்கே அவ்வப்போது அதிகரித்து வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரையில், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், மதுரை, விருதுநகர் உள்ளிட்ட பகுதிகளில் பாதிப்பு அதிகரித்து வருவதால்,
அங்கு ஊரடங்கு சற்று கடுமையாக்கப்பட்டு மக்கள் அரசின் அறிவுறுத்தலின்படி ஊரடங்கை பின்பற்றி வருகின்றனர். இந்நிலையில் பிற மாவட்டங்களில் தொற்று அதிகரிக்கும் பட்சத்தில், அந்த மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் முடிவின் பேரில் ஊரடங்கு அங்கே கடுமையாக்கப்பட்டு கொரோனாவுக்கான தடுப்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அந்த வகையில்,
கொரோனா பாதிப்பு அதிகரித்தன் காரணமாக, கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பேரூராட்சியில் மட்டும் இன்று முதல் வருகின்ற நான்காம் தேதி வரை எந்தவித தளர்வுகளின்றி முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. காட்டுமன்னார் கோவில் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இருக்கக்கூடிய மக்கள் தேவை இன்றி வெளியே வரக்கூடாது ஊரடங்கை மீறி வெளியே சுற்றினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.