கொரோனா தடுப்பு ஊரடங்கை மீறி வெளியே சுற்றியதாக 1,63,477 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கை மீறி சாலையில் சுற்றித் திரிந்தவர்களை கைது செய்து வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்து வருகின்றார்கள். அதேபோல போக்குவரத்து போலீசாரும் வழக்கு பதிவு செய்கிறார்கள். ஊரடங்கு மீறியதாக ஒரு லட்சத்து 75 ஆயிரத்து 636 பேரை காவல்துறை கைது செய்து ஜாமினில் வெளியே விட்டுள்ளது. ஊரடங்கு சட்டத்தை மீறியதாக 1,63,477 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக ஒரு லட்சத்து 39 ஆயிரத்து எட்டு வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்து இருக்கிறார்கள்.
அதே போல போக்குவரத்து விதியை மீறி செயல்பட்டதாக 68 லட்சத்து 57 ஆயிரத்து 344 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டது. இதேபோல வெளிநாட்டினர் எங்கெங்கெல்லாம் இருக்கிறார்கள் என்ற கணக்கெடுப்பு பணியில் போலீசார் ஈடுபட்டிருக்கிறார்கள். மதப் பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக தமிழகம் முழுவதும் 129 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறிப்பாக சென்னையில் நேற்று 8 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.