கொரோனாவை கட்டுப்படுத்த 4 ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் ஐந்தாவது என்ன சொல்ல போறோம் என்று மத்திய அரசு மிக தெளிவாக சொல்லி விட்டார்கள்.
மத்திய அரசு 5ஆவதை ஊரடங்கு என்று சொல்லவில்லை. படிப்படியாக உங்களுக்கு தளர்வுகள் எப்படி கொடுக்க போறோம் என்று சொல்லி அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கியுள்ளது.
மத்திய அரசின் வழிகாட்டுதல் படி மாவட்டத்திற்குள்ளேயோ, மாவட்டத்திற்கு வெளியேயோ செல்ல வேண்டும் என்றால் யாருடைய அனுமதியும் தேவையில்லை. கடிதம் மூலமாகவும், தொலைபேசி மூலமாகவும் யாருகிட்டயும் அனுமதி கொடுங்கள் என்று கேட்க வேண்டிய அவசியம் கிடையாது. ஒரு மாநிலத்துக்கும், மாநிலத்துக்கும் வெளியே பயணிக்க உங்களுக்கு முழு அனுமதி வழங்கப்படுள்ளது, யாரும் அச்சப்பட தேவையில்லை. யாரிடமும் சென்று எனக்கு பாஸ் கொடுங்க என்று ஆன்லைனிலும், நேரடியாகவும் கேட்க வேண்டிய அவசியம் இல்லை, நீங்கள் பயணிக்கலாம், உங்களுக்கு அந்த சுதந்திரம் இருக்கிறது.
மாநில அரசு ஒருவேளை இல்லை, இல்லை நாங்கள் கட்டுப்பாடு விதிக்கின்றோம் அப்படி சொல்றாங்கனா, அதுக்கு அதிகப்படியா விளம்பரம் செய்யணும், மக்களை சென்றடைய வேண்டும். எதற்கெல்லாம் முட்டுக்கட்டை போடுகிறது என்பதை மாநில அரசு மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். மத்திய அரசை பொறுத்தவரை ஒரு தனி மனிதன் அந்த மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டத்திற்கு இடையே செல்லலாம்.சொல்லப்போனால் இந்தியாவில எங்க பயணம் செய்ய வேண்டுமானாலும் சிறப்பு அனுமதி தேவையில்லை என்று மத்திய அரசு சொல்லியுள்ளது.
பாதிக்கப்பட்ட, தடைசெய்யப்பட்ட பகுதி பகுதியில் ஊரடங்கு தொடரலாம், அதற்கு வெளியே ஊரடங்கு தேவையில்லை என்று மத்திய அரசு செய்தி குறிப்பில் தெளிவாக குறிப்பிட்டுள்ளது. மாநில அரசு இதற்கான முடிவு எடுத்து கொள்ளலாம் என்றும் மத்திய அரசு விளக்கியுள்ளது.
ஜூன் மாதம் எட்டாம் தேதி முதல் இதற்கெல்லாம் அனுமதி:
வழிபாட்டுத்தலங்கள் ,
ஹோட்டல்கள்,
ரெஸ்டாரண்ட்,
இது சம்பந்தப்பட்ட நிறுவனங்கள்,
ஷாப்பிங் மால்
பள்ளிகள், கல்லூரிகள், பாடசாலைகள், கோச்சிங் சென்டர், ட்ரைனிங் இன்ஸ்டிட்யூட் மாநில அரசும் யூனியன் பிரதேசத்திலும் கலந்தாலோசித்து அடுத்த மாதத்தில் எடுக்கப்படும்.
சூழ்நிலை பார்த்து முடிவு எடுப்போம் என்று மத்திய அரசு சிலவற்றை குறிப்பிட்டுள்ளது:
சர்வதேச பயணம்,
மெட்ரோ ரயில் பயணம்,
சினிமா தியேட்டர்கள்,
ஜம்,
ஸ்விம்மிங் ஃபுல்,
என்டர்டைன்மென்ட் பார்க்,
சினிமா தியேட்டர்,
பார்ஸ்,
ஆடிட்டோரியம்,
மக்கள் கூடும் ஆசெம்ப்லி ஹால்,
சமூக விழா,
விளையாட்டு,
அரசியல் விழா,
கலாச்சார, மதரீதியாக அதிகப்படியான மக்கள் கூடுவதை சூழ்நிலை பார்த்து மத்திய அரசு முடிவுகளை அறிவிக்கும் என்று சொல்லியுள்ளது.
தனிநபர்கள் இரவு 9 மணியிலிருந்து காலை 5 மணி வரை வெளியே வருவது கூடாது, அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ள மட்டும் அனுமதிக்கப்படுவார்கள்.
அந்தந்தப் பகுதியில் உள்ளவர்கள் 144 தடை உத்தரவை போட்டுக்கொள்ளலாம்.
தடைசெய்யப்பட்ட பகுதிகளுக்கு மட்டும் தான் ஊரடங்கு பொருந்தும்.
அந்த பகுதியில் ஊரடங்கு ஜூன் 30ம் தேதி வரை இருக்கும்.
தடை செய்யப்பட்ட பகுதி எது என்று மாவட்ட அதிகாரிகள் முடிவெடுத்துக் கொள்ளலாம்.
தடைசெய்யப்பட்ட பகுதியில் அத்தியாவசிய பணிகள் அனுமதிக்கப்படும், அதில் எந்த தடையும் கிடையாது.
தடை செய்யப்பட்ட பகுதிகளில் தேவையில்லாமல் மக்கள் செல்வதும், மக்கள் வெளிவருவதும் இருக்கக் கூடாது.
தடைசெய்யப்பட்ட பகுதியில் ஏதேனும் பாதிக்கப்பட்டால் அவர் தொடர்பில் இருந்த அனைவருக்கும் பாதிக்கப்பட்டுள்ளார்களா என்று முன்புறமாக நடவடிக்கை எடுக்கப்படும்.
தடை செய்யப்பட்ட பகுதிக்கு அருகே, இங்கு அதிகம் பேர் பாதிக்கலாம், பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது என்றால் மாநில அரசு யூனியன் பிரதேசம் தடை உத்தரவு போட்டுகொள்ளலாம்.
65 வயதுக்கு மேலானவர்கள், கர்ப்பிணி பெண்கள், 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள் வீட்டில் இருக்குமாறு மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
ஆரோக்கிய சேது செயலியை அனைவரும் பயன்படுத்தவும்.
மத்திய அரசு கொடுத்துள்ள வல்கட்டுதலில் மாநில அரசுகள் பெரிய மாற்றங்கள் கொண்டு வரக்கூடாது, மத்திய அரசு என்ன வழிகாட்டல் கொடுத்துள்ளதோ அதற்கு தகுந்தார்போல் மாநில அரசு செயல்பட வேண்டும்.
முக கவசம் கண்டிப்பாக அணியுங்கள்,
இரண்டு பேருக்கான இடைவெளி 6 ஆக இருக்கட்டும்
அதிகமாக மக்கள் கூடாதீர்கள்.
திருமணத்திற்கு 50 பேருக்கு மேல் கூடாதீர்கள்.
இறுதி சடங்கு நடத்தும் போது 20 பேருக்கு மேல் கூடாதுங்க,
பொது இடங்களில் எச்சில் துப்பாதீர்கள்,
பொது இடங்களில் மது அருந்துவது கூடாது,
பணி செய்யும் இடங்களில் முடிந்தளவுக்கு தூய்மையாக வைத்துக் கொள்ளுங்கள்