நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவியதை அடுத்து அதனை கட்டுப்படுத்த மத்திய – மாநில அரசுகள் பொது முடக்கத்தை அமுல்படுத்தியது. கிட்டத்தட்ட ஏழு – எட்டு மாதங்களாக பொதுமுடக்கம், பொதுமுடக்க தளர்வு என கொரோனாவுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. தற்போது இந்தியாவில் கொரோனா கட்டுக்குள் இருந்தாலும் பிற நாடுகளில் இரண்டாம் அலை ஏற்பட்டுள்ளது.
அதே போல தமிழகத்திலும் கொரோனாவுக்கான இரண்டாம் அலை எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதனால் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு அமல் படுத்தப்படும் என்ற அச்சம் மக்களிடையே நிலவி வந்தது. இதற்கு பதிலளித்த தலைமைச் செயலாளர் சண்முகம், தமிழகத்தில் பொது ஊரடங்கு தேவையில்லை என்றும், அரசின் அறிவுரைகளையும் மக்கள் பின்பற்றினாலே போதுமானது என்றும் தெரிவித்துள்ளார்.