பிரேசிலில் மீண்டும் கொரோனா வேகமாக பரவி வருவதால் ஊரடங்கு அமல்படுத்த வேண்டும் என்று சுகாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
நாடு முழுவதும் கொரானா வைரஸ் பரவி பெரும் உயிர் பலியை ஏற்படுத்தி வருகிறது. அதனை கட்டுப்படுத்த பல நாடுகளும் தடுப்பூசியை செலுத்தி வருகிறது. இருப்பினும் சில நாடுகளில் கொரோனா வைரஸ் மீண்டும் வேகமாக பரவி வருகிறது. அந்த வகையில் பிரேசில் நாட்டில் கொரோனாவால் இதுவரை 10,647,845 பேர் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் 470,500 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் தற்போது பிரேசிலில் கொரோனா தீவிரமாக பரவி வருவதால் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 8,244 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது தொற்று பாதிப்பு அதிகரித்து இருப்பதால் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள படுக்கைகள் நிரம்பி காணப்படுகிறது. ஆகையால் இதனை கட்டுப்படுத்த நாடு முழுவதும் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்த வேண்டும் என்று அந்நாட்டு சுகாதார நிபுணர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.