தமிழகத்தில் பேருந்து இயக்குவது குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என்று தகவல்கள் கசிந்துள்ளது.
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மாவட்ட ஆட்சியருடன் ஆலோசனை நடத்தி வருகிறார். கொரோனா தடுப்பு பணிகள் மேற்கொள்வது குறித்து இந்த ஆலோசனையில் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. வருகின்ற வருகின்ற 31 ஆம் தேதியோடு பொது முடக்கம் முடிவடைந்திருக்கும் நிலையில் தற்போது நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இன்று மதியம் 3 மணிக்கு முதல்வர் பழனிசாமி யுடன் மருத்துவ குழுவினர் ஆலோசனை நடத்த உள்ளனர். ஆலோசனைக்கு பின் சில தளர்வுகளுடன் மீண்டும் ஊரடங்கு ஒரு மாதத்துக்கு நீட்டிப்பு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு, பேருந்து பாதி அளவில் இயக்கம் உள்ளிட்ட பல முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.