ஊரடங்கால் சென்னையில் அனைத்து பகுதிகளிலும் 79% குற்றங்கள் குறைந்துள்ளதாக காவல்துறை அறிவித்துள்ளது.
கொலை வழங்கில் 44% கொள்ளை வழக்கில் 75% வீடு புகுந்து திருடுதல் வழக்கில் 59% குறைந்துள்ளதாக சென்னை காவல்துறை அறிவித்துள்ளது. மேலும் தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 1,85,896 வாகனங்கள் இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. மேலும் தமிழகத்தில் ஊரடங்கை மீறி வெளியே சுற்றிய 2.18,533 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளன. 1,85,896 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் ரூ. 98,07,394 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் அந்தந்த காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வழங்கப்படும். எப்.ஐ.ஆர்.பதிவு செய்யப்பட்ட வரிசையின்படி, வாகன உரிமையாளர்களுக்கு, எந்த இடத்திற்கு வந்து வாகனங்களை திரும்ப பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற தகவல் முன்னதாக அனுப்பப்படும். தகவல் பெற்றவர்கள் நேரில் வந்தவுடன், உரிய ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு, வாகனங்கள் அவர்கள் வசம் ஒப்படைக்கப்படும் என தமிழக காவல்துறை அறிவித்துள்ளது.
வழக்குப்பதிவு செய்யப்பட்ட எப்.ஐ.ஆர்.நகல், வாகன உரிமையாளர்களின் ஓட்டுனர் உரிமத்தின் ஒரிஜினல் மற்றும் ஜெராக்ஸ் நகல், வாகனத்தின் ஆர்.சி.புத்தகம் ஒரிஜினல் மற்றும் ஜெராக்ஸ் நகல் ஆகியவற்றை வாகன உரிமையாளர்கள், வாகனங்களை திரும்ப பெறும் போது காட்ட வேண்டும்.