கொரோனா ஊரடங்கால் பாக்கெட்டில் வைத்து விற்கப்படும் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் விலையேற்றம் இருக்குமா ? என்ற அச்சம் எழுந்துள்ளது.
சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் அதன் கோர தாண்டவத்தை காட்டிவருகிறது. நாளுக்குநாள் பலியானோரின் எண்ணிக்கையும், உயிரிழந்தோர் எண்ணிக்கையும் ஆயிரக்கணக்கில் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. கடந்த சில வாரங்களாக இந்தியாவிலும் கொரோனாவின் கொடூரம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிரரா மாநிலம் தான் கொரோனவள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பில் இரண்டாம் இடத்தில் இருக்கும் தமிழகத்தில் 690 பேருக்கு கொரோனா உறுதி செய்யபட்டுள்ளது. முன்னதாக கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதை உணர்ந்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். குறிப்பாக ஏப்ரல் 14ஆம் தேதி வரை 21 நாள் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து நாடு முழுவதும் பிறப்பித்தது மத்திய அரசு அறிவித்தது.
அத்தியாவசிய தேவைகளை தவிர ஏனைய தேவைகள் அனைத்தும் முடக்கப்பட்டன. பொதுமக்கள் வெளியேவர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஏப்ரல் 14 இன்னும் ஐந்து நாட்களே இருக்கும் நிலையில் சில உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் பிஸ்கட், நூடுல்ஸ் உள்ளிட்ட பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே இருந்த சரக்குகள் விற்பனையாகிவிட்டதால் மளிகைக்கடைகளில் பாக்கெட் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.