Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு? அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை

சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் தலைமையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி மூலம் ஆலோசனை தொடங்கியது.

3ம் கட்ட ஊரடங்கு நிறைவு பெற உள்ள நிலையில், ஊரடங்கை நீட்டிப்பது குறித்து ஆலோசனை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா தடுப்பு மற்றும் நிவாரண பணிகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் விஜயபாஸ்கர், சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்னன், சென்னை மாநகராட்சி ஆணையர், சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

நேற்று நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி, “இந்தியாவில் அமல்படுத்தப்பட உள்ள லாக்டவுன் 4 மிகவும் மாறுபட்டதாக இருக்கும், மே 18ம் தேதிக்கு முன் இதற்கான விவரங்கள் வெளியிடப்படும் என்று அறிவித்துள்ளார். மேலும் நேற்று முன்தினம் அனைத்து மாநில முதல்வர்களுடன் காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில் தமிழகத்தில் ஊரடங்கு குறித்து எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.

Categories

Tech |