Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

ஊரடங்கு நீட்டிப்பு…! ”சீனாவால் வந்த வினை” ICMR தகவலால் பகீர் …!!

ரேபிட் டெஸ்ட் கிட்களால் இந்தியாவின் ஊரடங்கு மேலும் நீடிக்கப்படுமா ? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் அறிகுறியை வேகமாக கண்டறியும் ரேபிட் டெஸ்ட் கிட்கள் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது. இது பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு சோதனை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் மேற்கு வங்கம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் ரேபிட் டெஸ்ட் கிட்கள் சரியாக வேலை செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இது நாட்டு மக்களை தூக்கி வாரிப்போட்டது. குறிப்பாக ராஜஸ்தானில் ரேபிட் டெஸ்ட் கிட் மூலம் நெகட்டிவ் என்று வந்தவர்களுக்கு பிறகு பாசிட்டிவ் என்று வந்திருக்கிறது.

இந்த பரிசோதனை துல்லியமாக இல்லை, தவறான முடிவுகளையும் காட்டுகிறது என்று கூறி ராஜஸ்தான் மாநிலம் ரேபிட் டெஸ்ட் கிட்கள் மூலம் பரிசோதனை செய்யப்போவதில்லை என்று அறிவித்தார்கள். இதுகுறித்து இன்றைய செய்தியாளர்களை சாந்திப்பில் விளக்கம் அளித்த இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், அடுத்த இரண்டு நாட்களுக்கு எந்த மாநில அரசுகளும்  ரேபிட் டெஸ்ட் கிட்களை பயன்படுத்த வேண்டாம். ரேபிட் டெஸ்ட் கிட்கள் எப்படி செயல்படுகிறது, எப்படி செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் தொடர்பாக மாநில அரசுகளுக்கு இன்னும் சில தினங்களில் நாங்கள் தெளிவுபடுத்த இருக்கின்றோம் புதிய அறிவுறுத்தல்களை தெரிவித்துள்ளது.

இது நாட்டு மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு பல்வேறு கேள்விகளையும் எழுப்பியுள்ளது. இந்தியாவில் கொரோனா தாக்கம் தற்போது வரை அதிகரித்துக்கொண்டு இருக்கும் நிலையில் மே 3 ஆம் தேதியோடு ஊரடங்கு முடிவடைய இருக்கின்றது. இன்னும் 12 நாட்கள் இருக்கும் நிலையில் தற்போது ரேபிட் டெஸ்ட் கிட் தொடர்பாக இப்படி ஒரு புதிய பிரச்சினை எழுந்துள்ளதால் இன்னும் இரண்டு நாட்களுக்கு ரேபிட் டெஸ்ட் கிட் சோதனை வேண்டாம் என்று ICMR தெரிவித்துள்ளது. இதனால் இந்தியாவில் கொரோனா தாக்கம் எந்த அளவு இருக்கப்போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஊரடங்கு முடிவதற்குள் கொரோனவை கட்டுப்படுத்தி விடலாமா ? என்ற பல்வேறு கேள்விகள் சாமானிய மக்களிடம் இருந்து வருகின்றது. ஏற்கனவே கொரோனா அறிகுறிகளான காய்ச்சல், சளி, இருமல் உள்ளிட்ட எதுமே இல்லாமல் 80 சதவீதத்தினருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என்று இந்திய மருத்துவ கவுன்சில் ஏற்கனவே தெரிவித்திருந்த நிலையில் தற்போது ரேபிட் டெஸ்ட் கிட்கள் மூலம் புதிய பிரச்சனை எழுந்துள்ளது. சீனாவை தரமான ரேபிட் டெஸ்ட் கிட்களை வழங்கி இருந்தால் நாம் விரைவாக சோதனை செய்து கொரோனவை கட்டுப்படுத்த முடியும்.

இதே போல வெளிநாட்டின் ஆய்வாளர்கள் வவ்வால்கள் மூலம் கொரோனா பரவினால் அது பேரழிவை ஏற்படுத்தும் என்று எச்சரித்த நிலையில், இந்தியாவில் வவ்வால்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளாதாக ஏற்கனவே இந்திய மருத்துவ கவுன்சில் தெரிவித்திருந்தது இதை அனைத்தையும் பொருத்தி பார்க்கும் பட்சத்தில் இந்தியாவில் இருக்கும் மக்கள் தொகையுடன் ஒப்பிட்டால் இந்தியா கொரோனாவின் பிடியில் சிக்கி விடுமோ என்ற அச்சம் எழுகின்றது.

கொரோனா வைரஸ்: இன்று நாட்டு ...

இப்படி மேல் கூறிய பல்வேறு அம்சங்களை கணக்கிலெடுத்து இந்தியா கொரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் பணிகளை முடுக்கி விடுமென்றால் கண்டிப்பாக மே 3ஆம் தேதி வரை உள்ள ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்டுவதற்கான வாய்ப்பு அதிகமாகவே இருக்கின்றது. கொரோனவை தடுக்க மத்திய அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மிக சாமர்த்தியமாக எடுத்துவரும் நிலையில் இதையும் திறம்பட கையாளும் என்று நாம் நம்பலாம். அண்டை நாடான சிங்கப்பூர் ஜூன் 1ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |