ஊரடங்கு நீட்டிப்பு குறித்து இன்று காலை 10 மணிக்கு பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் பேசுகின்றார்
இந்தியாவை மிரட்டி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு பிறப்பித்தது. இன்றோடு 21 ஆவது நாள் ஊரடங்கு உத்தரவு நிறைவடையும் நிலையில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருக்கிறது. உயிரிழப்பும், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்வதால் பொதுமக்களிடையே அச்சம் எழுந்துள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து பிரதமர் மாநில முதலமைச்சர்களுடனும், உயர் அதிகாரிகளுடனும் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார். கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு சிறந்த வழி சமூக விலகல் தான் என்பதை உள்வாங்கி மாநில அரசுகள் பொதுமக்கள் வெளியே வர தடை விதித்திருந்தது. அத்தியாவசிய பொருட்களுக்கு மட்டும் வெளியே வரவேண்டும் என்றும் தேவையில்லாமல் வெளியே வருபவர்கள் மீது நடவடிக்கையும் எடுத்து வந்தது.
இந்நிலையில்தான் கொரோனா தடுஅவடிக்கைகள் குறித்து இரண்டாவது முறையாக மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தியபோது பெரும்பாலான மாநிலங்கள் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்தன. அதேபோல மருத்துவர்கள் பலரும் ஊரடங்கு நீடித்தால் மட்டுமே கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர். சில மாநிலங்கள் முன்னுதாரணமாக இருந்து ஏப்ரல் 30ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து உத்தரவிட்டது.
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி குறித்து நான்காவது முறையாக நாட்டு மக்களிடம் இன்று உரையாற்றுகிறார். இன்று காலை 10 மணிக்கு மக்களிடம் பேசும் பிரதமர் நரேந்திர மோடி ஊரடங்கு நீட்டிப்பு குறித்தும் மக்களுக்கு வழங்கப்பட இருக்கும் நிவாரணம் குறித்தும் தெரிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.