Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் தளர்வுகளுடன் ஊரடங்கு அமல் ….!!

தமிழகத்தில் இன்று முதல் 4ஆம் கட்ட தளர்வுடன் கூடிய பொது முடக்கம் அமுலாகியுள்ளது.

உலகையே ஆட்டி படைக்கும் கொரோனா பெருந்தொற்று இந்தியாவையும் நடுங்க வைத்து வருகிறது. இதனால் நாடு முழுவதும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. நாட்டின் வளர்ச்சி மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு அடுத்தடுத்த நிலைகளில் ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டு இருக்கிறது. நாடு முழுவதும் இன்று முதல் ஊரடங்கு நான்காம் கட்ட தளர்வு அமலாகிறது.

அந்த வகையில் தமிழகத்திலும் இன்று முதல் செப்டம்பர் 30-ஆம் தேதி வரை அடுத்த தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அரசு, தனியார் அலுவலகங்கள், ஐடி நிறுவனங்கள் 100 சதவீத பணியாளர்களுடன் இயங்கலாம். திரையரங்குகள், நீச்சல் குளங்கள் , பொழுதுபோக்கு பூங்காக்கள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் ஏழாம் தேதி முதல் பெருநகர சென்னையில் மெட்ரோ ரயில் சேவைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Categories

Tech |