தமிழகத்தில் 30ஆம் தேதி வரை நீட்டிக்கபட்டுள்ளது என்று தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.
தமிழக முதலமைச்சர் சார்பில் வெளியிடப்படுள்ள அறிக்கையில் தமிழகத்தில் வரும் 30ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்ட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பேரிடர் மேலாண்மை சட்டம், குற்றவியல் விசாரணை முறை சட்டப்பிரிவு 144இன் படி ஊரடங்கு நீடிக்கப்படுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், உலக சுகாதார அமைப்பின் அறிவுரைபடியும், மருத்துவர்களின் பரிந்துரையின் படியும் மாநிலத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்டுள்ளது.
கொரோனா நோய் தொற்று அதிகரித்து விடக் கூடாது என்பதை கருத்தில் கொண்டு ஊரடங்கு உத்தரவை தமிழகத்தில்நீட்டித்துள்ளதாக முதலமைச்சர் அறிவித்துள்ளார். இதனால் தமிழகத்தில் 21 நாட்கள் ஊரடங்கு காலத்தில் எடுக்கப்பட்ட அனைத்துக் கட்டுப்பாடுகளும் தொடரும் என்றும், தமிழகத்தில் உள்ள குடும்பத்தாருக்கு அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் ஒரு கிலோ, சர்க்கரை ஒரு கிலோ, துவரம் பருப்பு குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
கட்டிட தொழிலாளர்கள், பதிவு பெற்ற அனைத்து அமைப்புகளுக்கும் குடும்பம் ஒன்றுக்கு இரண்டாவது முறையாக ஆயிரம் ரூபாய் நிவாரண உதவித் தொகை வழங்கப்படும் என்றும், பிற மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு மே மாதத்தில் 15 கிலோ அரிசி, ஒரு கிலோ துவரம் பருப்பு வழங்கப்படும். காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை பேக்கரி கடைகள் திறக்கலாம். தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பது தான் அரசின் நோக்கம். கொரோனா வைரஸ் நோயை கட்டுப்படுத்த அரசுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்றும் தற்போது முதலமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.