பிரான்சில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்த வேண்டும் என்று மருத்துவ நிர்வாக தலைவர் தெரிவித்துள்ளார்.
பிரான்சில் மீண்டும் புதிய ஊரடங்கு அமல்படுத்து குறித்து அரசாங்கத்திற்கும், அதிகாரிக்கும் இடையில் கருத்து முரண்பாடு ஏற்பட்டு வருகிறது. தலைநகர் பாரிஸின் தெற்கே உள்ள ஃபோன்டைன்லேவ் மேயரான ஃபிரடெரிக் வாலெட்டூக்ஸ் தற்போது இருக்கும் சூழலில் ஊரடங்கு தேவையில்லை என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிரான்ஸ் பிரதமரான ஜென் காஸ்டெஸ் தெரிவித்ததாவது, நாட்டின் கொரோனா நிலைமை தற்போது பலவீனமாகவே இருக்கிறது. அதனால் ஒரு புதிய ஊரடங்கு தேவையில்லை என்று கூறியுள்ளார். இருப்பினும் பிரான்ஸ் முன்னணி மருத்துவர்கள் ஊரடங்கு அவசியம் என்று தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து பிரான்ஸ் மருத்துவமனையின் தொற்று நோய் நிபுணர்களின் தலைவர் கரைன் லாகோம்பே கூறியதாவது, பிரான்சில் இன்னும் கொரோனா தொற்று உச்சத்தில் தான் இருக்கிறது. அதனை கட்டுப்படுத்துவதற்கு புதிய நடவடிக்கைகளும், கட்டுப்பாடுகளும் தேவை என்று தெரிவித்துள்ளார்.