Categories
மாநில செய்திகள்

“ஊரடங்கு அறைகூவல்” மனுஷ நடமாட்டே இல்ல…. தீவிர ரோந்து பணியில் காவல்துறை…!!

சுய  ஊரடங்கை  பயன்படுத்தி அசம்பாவிதங்கள் ஏதும் நடந்து விடக்கூடாது என்பதற்காக தமிழக காவல்துறை தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறது.

கொரோனா பதிப்பை தடுக்கும் விதமாக பிரதமர் நரேந்திர மோடி சுய ஊரடங்கை கடைபிடிக்குமாறு வேண்டுகோள் விடுத்தார். இதனை இந்தியாவில் இருக்கக்கூடிய அனைத்து தரப்பினரும் ஏற்று ஊரடங்கை என்று கடைபிடித்து வருகின்றனர்.

குறிப்பாக போக்குவரத்து வசதிகள் கூட தடை செய்யப்பட்டு சாலைகள் அனாதைகளாக காட்சியளிக்கின்றன. இது ஒரு நல்ல செய்தியாக இருந்தாலும். இந்த ஊரடங்கை பயன்படுத்தி அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெற்று விடக்கூடாது என்பதற்காக தமிழக காவல்துறை மிக உன்னிப்பாக செயல்பட்டு வருகிறது. சாலைகளில் ஆங்காங்கே முககவசம் உள்ளிட்ட தகுந்த பாதுகாப்புடன் அதிகாரிகள் ரோந்து பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |