தமிழகத்தில் நாட்டு படகில் சென்று மீன் பிடிக்க அனுமதி வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால் நாடு முழுவதும் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழக அரசு மீனவர்களுக்கென்று சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. தற்போதைய ஊரடங்கு காலம் மீன்பிடி தடை காலம் கருதி விசைப்படகுகள் மீன் பிடிப்பில் ஈடுபட அனுமதி இல்லை. தமிழகத்தில் நாட்டுப் படகுகள், இயந்திரம் பொருத்திய நாட்டுப் படகுகள் தொடர்ந்து மீன் பிடிக்கலாம்.
படகு உரிமையாளர்கள் கொரோனா வராமல் தடுக்க முக கவசம் போன்ற பாதுகாப்பு உபகரணங்களை மீனவர்களுக்கு தரவேண்டும். மீன்பிடி துறைமுகம், மீன்பிடி இறக்குதலம், கடற்கரைப் பகுதிகளில் மீன்களை பொது ஏலம் மூலம் விற்க கூடாது. மீன் இறக்குதல், மீன் சந்தைக்கு கொண்டு செல்லுதல் போன்ற பணிகளுக்கு குறைந்த அளவு ஆட்களை நியமனம் செய்ய வேண்டும்.ஆட்சியர் தலைமையிலான குழு எந்த நாளில், எத்தனை படகுகளில் மீன்பிடிக்கச் செல்லலாம் என முடிவு செய்யும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.