Categories
மாநில செய்திகள்

ஊரடங்கில் தளர்வு… வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

கோவை மாவட்டத்தில் முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில் சில தளர்வுகள் அளிக்கப்படுகின்றது.

கொரோனா வைரஸ் நோய்த் தடுப்பு நடவடிக்கையாக தற்போது முழு ஊரடங்கு அமலில் உள்ளது. கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் அரசு ஆணைக்கிணங்க முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. காய்கறிகள், பழங்கள், மளிகை பொருட்கள் மொத்த வியாபாரம் செய்யும் வியாபாரிகள் நேர கட்டுப்பாடுடன் சமூக இடைவெளியை கடைபிடித்து வியாபாரம் செய்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தற்போது புதிய தளர்வாக கோவை மாநகராட்சி பகுதியில் கோழி இறைச்சி மற்றும் ஆன்லைன் மூலம் விற்பனை செய்ய மாநகராட்சி நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. மேலும், கோழி இறைச்சி மற்றும் முட்டைகளை வாடிக்கையாளர்களின் வீட்டிற்கு சென்று வழங்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது என மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |