ஆஸ்திரேலியாவில் ஆகஸ்ட் 9-ஆம் தேதி வரை பிரிஸ்பேன் உள்ளிட்ட பல நகரங்களில் ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆஸ்திரேலியாவில் உள்ள பல்வேறு நகரங்களிலும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் செவ்வாய்க்கிழமையுடன் பிரிஸ்பேன் உள்ளிட்ட பல நகரங்களிலும் ஊரடங்கு நிறைவடைய இருந்த நிலையில் டெல்டா வகை கொரோனா தொற்று சிலருக்கு அதிவேகமாக பரவி வருவது உறுதிசெய்யப்பட்டது.
இதனால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் பிரிஸ்பேன் உள்ளிட்ட நகரங்களில் நீடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே பாதுகாப்பு அமைச்சரான பீட்டர் டட்டனுடைய மகன் பயின்று வரும் பள்ளியில் தொற்று பாதிப்பு சிலருக்கு உறுதி செய்யப்பட்டதால் அவர்களை வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.