தமிழகத்தில் ஊரடங்கு விதிமுறைகளை தீவிரப்படுத்த வேண்டும் என அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் மே 10ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் அத்தியாவசிய தேவைக்காக மட்டும் வெளியில் வர வேண்டும் என்று எச்சரித்துள்ளது. இதைத்தொடர்ந்து காவல்துறையினர் மற்றும் சென்னை ஆணையர் நாளை முதல் கடுமையான ஊரடங்கு அமல்படுத்தப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில் ஊரடங்கு விதிமுறைகளை மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என்று அனைத்து கட்சி கூட்டத்திலும் 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. அவை என்னவென்றால்
1. ஊரடங்கு தளர்வை கடுமையாக்குதல்
2. அரசு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைத்தல்
3. அரசியல் கட்சி கூட்டம் நடத்த தடை
4. மக்களை கட்டுப்பாடுடன் செயல்பட அறிவுறுத்தல்
5. அனைத்து கட்சி உறுப்பினர் கொண்ட சட்டமன்ற குழு அமைத்தல்